Wednesday, September 15, 2010

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்? எம்.எம் அக்பருக்கான கேள்வி?



கேனான் என்ற பதம் உபயோகப்படுத்தப்படும் பொழுது, கேனான் என்றால் எபிரேய மொழியில் சத்தியத்தின் அளவுகோல் என்று அர்த்தமாகும். மற்றொருவிதத்தில் ஏன் வேதத்தின் 66 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டிலும் கூட வேறு அநேக சுவிசேஷங்கள் இருந்தன. பிறகு ஏன் நான்கை மட்டும் தெரிந்து கெண்டிருக்கிறீர்கள்? 

முதலாவதாக, நாம் லூக்கா 24 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது 25 முதல் 27 வசனங்கள் சொல்லுகின்றன்.   இயேசு சொல்லுகிறார், "தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாதவர்களாக இருக்கிறீர்களே, நான் மரித்து, மரணத்திலிருந்து உயிரோடெழும்ப வேண்டும் என்பதை அறியாதிருக்கிறீர்களோ". மேலும் அவை கூறுகின்றன, அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களிலும், சங்கீதப் புஸ்தகங்களிலும் தன்னைக் குறித்து எழுதியிருக்கிறதைக் குறித்து விளக்குகிறார். எபிரேயத்தில் தௌரா, நெபீம், கெத்துபீம் என்று சொல்லுகிறோம் இவைகள் தான் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களாகும். ரோமன் கத்தோலிக்கர்கள் நண்பர்கள் வேறு சில புத்தகங்களும் உள்ளன என்று ஒருவர் சொல்லலாம். ஆனால் 2 மக்காபியர் 2ம் அதிகாரம் 23, 24 முதல் 32 வசனங்கள் வரை, சொல்லப்படுகிறது மெய்யான தீர்க்கதரிசி எழும்பும் வரை நீங்கள் காத்திருங்கள். அதன் அர்த்தம என்னவெனில் மக்காபியர் புத்தககத்தின் ஆக்கியோன் அதை எழுதும் போதும் அங்கே மெய்யான தீர்க்கதரிசிகள் இருக்க வில்லை. மீண்டும் 1 மக்காபியர் 9: 27 மற்றும் 4: 41 சொல்லுகின்றன, மெய் தீர்க்கதரிசி வரும் வரை காத்திருங்கள். எனவே இந்த சேர்க்கைகள் எழுதப்படும் போது அங்கே மெய் தீர்க்கதரிசிகள் இல்லை என்று ரோமன் கத்தோலிக்க புத்தகங்களே கூறுகின்றன. மீண்டும் லூக்கா 24 ம் அதிகாரம் 44-46 வசனங்களில்        தன்னைப்பற்றி மோசேயின் நியாயப்பரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலும் சங்கீதங்களிலும் எழுதியிருக்கிறவைகளைப் பற்றி இயேசு வெளிப்படுத்துகிறார் என்று சொல்லுகின்றன. எனவே பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களைத் தான் இயேசு உபயோகப்படுத்தியிருக்கிறார். மேலும் புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்கள் இந்தப் பழையஏற்பாட்டை 210 தடவை மேற்கோள்காட்டியிருக்கின்றனர். இயேசு எந்த ஒரு தள்ளுபடியாகமத்திலிருந்தும் குறிப்பை மேற்கோள்காட்டவில்லை. அப்போஸ்தலர்கள் எந்த தள்ளுபடியாகமத்திலிருந்தும மேற்கோள்காட்டவில்லை. எனவே பழைய ஏற்பாடானது 39 புத்தகங்களாக கிறிஸ்துவால் தீர்மானிக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை ரோமன் கத்தோலிக்கர்களும், புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்களும் ஒரேமாதிரியான 27 புத்தகங்களையே கொண்டுள்ளனர். எனவே நமக்கு 66 புத்தகங்கள் இருக்கின்றன.


இப்போது, எம்.எம் அக்பருக்கான கேள்வி, ஷகியல் புக்கரி வால்யூம்  6 ஆம் அதிகாரத்தில் குரானின் புனிதம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லுகிறது . முகமது நபி குரானை எழுதுவதற்கு 4 ஆட்களை நியமித்தார். உபயபின்காப், இப்னு மசூத், சலீம், ஜபல். ஜபலும், சலீமும் யமாமா என்ற போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால் மீதமிருந்து இரண்டுபேரில், இப்னு மசூதின் குரானில் 111 அதிகாரங்கள் இருந்தன, அதேசமயம் உபயபின்காப்பின் குரானில் 116 அதிகாரங்கள் இருந்தன. ஏன் எம். எம் அக்பர் தன்னுடைய குரானில் 114 அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு எழுத்தர்களையும் முகமது நபி நியமித்தபோது (உபயபின்காப் மற்றும் இப்னு மசூத்) உபயபின்காப் தன்னுடைய குரானில் 116 அதிகாரங்களைக் கொண்டிருந்தார், இப்னு மசூத் வெறும் 111 அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.  குரான் சொர்க்கத்தில் எழுதப்பட்டதாக அக்பர் நம்புகிறார். எனவே சொர்க்கத்தில் அது 111 அதிகாரமா அல்லது 116 அதிகாரமா? 114 அதிகாரங்களை மட்டும் தெரிந்து கொள்ள அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், லூக்கா 24 ஆம் அதிகாரம் 27 மற்றும் 44 - 46 வசனங்களில் இயேசு சொல்லுகிறார், தௌரா, நெபீம், கெத்துபீம் ஆகிய 39 பழைய ஏற்பாட்டு புத்தகங்ளில் தெய்வீக வெளிப்பாடு இருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் அதை விசுவாசிக்கிறோம். குரானில் 114 அதிகாரங்கள் மட்டுமே உள்ளது என்று அல்லா எங்கே கூறியிருக்கிறார்.? 114 அதிகாரங்கள் தான் உள்ளது என்று முகமது எங்கே சொல்லியிருக்கிறார்? நீங்கள் எப்படி அதை உங்களுக்கு தீர்மானித்துக் கொண்டீர்;கள்? ஷகியல் புகாரி வால்யூம் 6 ம் அதிகாரம், 510 முதல் 514 வரை உள்ள ஹதீஸ்கள் சொல்லுகிறது "ஏராளமான குரான்கள் இருந்தன".  இங்கே என்னிடத்தில் 28 குரான்கள் இருக்கின்றன.  எம். எம். அக்பர் இந்த சவாலை ஏற்றுக் கொள்ள முடியுமா? நாங்கள் இப்போது அக்பருடைய வீட்டில், அவருடைய சொந்த ஊரில் இருக்கிறோம். அவருக்கு 28 குரான்கள் இருக்கும் போது ஏன் உஸ்மான் எல்லாக் குரான்களை எரித்து விட்டு ஒரே ஒரு குரானை மட்டு;ம் வைத்தார்? இந்த தலைப்பிலே வந்து வாதம் செய்வதற்கு எம். எம். அக்பருக்கு தைரியம் இருக்கிறதா? அவர் தன்னுடைய குரான் மெய்யானது என்று உண்மையிலே விசுவாசித்தால், நாங்கள் அவரை இந்த வாதத்திற்கு அழைக்கிறோம். 


video link